கோபி ஜமாபந்தி நிறைவு 79 மனுக்களுக்கு தீர்வு
கோபி ;கோபி தாலுகாவில் ஐந்து உள்வட்டத்துக்கான ஜமாபந்தி, கடந்த, 22ல் தொடங்கிய நிலையில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் தலைமையில், தாசில்தார்கள் சரவணன், வெங்கடேஸ்வரன், சிவகாமி அடங்கிய குழுவினர் மனுக்களை பெற்றனர். கோபி, காசிபாளையம், கூகலுார், வாணிப்புத்துார், சிறுவலுார் உள்வட்டத்தில், பட்டா மாறுதல், விவசாய கூலி உதவித்தொகை, நில அபகரிப்பு, வேலைவாய்ப்பு என, 355 மனுக்கள் பெற்றதில், 79 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. எஞ்சிய, 276 மனுக்கள் விசாரணையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.