உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.20 லட்சம் மோசடியில் அரசு பஸ் டிரைவர் கைது

ரூ.20 லட்சம் மோசடியில் அரசு பஸ் டிரைவர் கைது

ரூ.20 லட்சம் மோசடியில்அரசு பஸ் டிரைவர் கைதுஈரோடு, நவ. 29-கோபி, சீதாலட்சுமி புரத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. தன் மகனுக்கு வருமான வரித்துறை ஆய்வாளர் பணியை வாங்கி தருமாறு, சீதாலட்சுமி புரத்தை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சாமியப்பன், 54, என்பவரிடம், 2021ல், 20 லட்சம் ரூபாய் தந்துள்ளார். வேலை வாங்கி தராததால், ஏற்கனவே கோபி போலீசில் புகாரளித்திருந்தார். இந்நிலையில் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த பெட்டிஷன் மேளாவில், வெள்ளியங்கிரி மனு கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட சாமியப்பனை, கைது செய்ய அறிவுறுத்தினர். இதையடுத்து அவரை கோபி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை