உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர்-அறந்தாங்கிக்கு அரசு பஸ் இயக்கம்

அந்தியூர்-அறந்தாங்கிக்கு அரசு பஸ் இயக்கம்

அந்தியூர், அந்தியூரில் இருந்து அறந்தாங்கிக்கு புதிய பஸ் சேவை நேற்று தொடங்கப்பட்டது. எம்.எல்.ஏ., வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தினமும் காலை, 9:35 மணிக்கு அந்தியூரில் புறப்பட்டு, ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக அறந்தாங்கிக்கு மாலை, 6:50 மணிக்கு சென்றடைகிறது. இரவு, 8:50 மணிக்கு அறந்தாங்கியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:30 மணிக்கு அந்தியூரை அடையும். நிகழ்ச்சியில் போக்குவரத்து பொது மேலாளர் சிவக்குமார், கிளை மேலாளர் நிர்மல்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி