உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

ஈரோடு, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் - ஈரோடு மாவட்ட மையம் சார்பில், மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் தலைமையில் தர்ணா போராட்டம் நடந்தது.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி எண்-309 ன்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு சி.பி.எஸ்., ஊழியர்களுக்கு பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 3 சதவீதம் அகவிலைப்படியை, கடந்த ஜூலை, 1 முதல் ரொக்கமாக வழங்க வேண்டும். 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். மறுசீரமைப்பு என்ற பெயரில் பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.கிராம உதவியாளர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். கல்வித்தகுதி அடிப்படையில் பிற துறைகளில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மாவட்ட செயலர் வெங்கிடு, நிர்வாகிகள் சாமிகுணம், தங்கராஜ், பழனிசாமி, குருநாதன், உஷாராணி, செந்தாமலர் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி