உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாக்குறுதிப்படி கூடுதல் தொகை அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

வாக்குறுதிப்படி கூடுதல் தொகை அரசு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில், ஈரோடு தாலுகா அலுவலகம் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.தி.மு.க., தந்த தேர்தல் வாக்குறுதிப்படி, 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு, கூடுதல் ஓய்வூதியம், 10 சதவீதம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடிகள் நீக்கி, ஓய்வூதியர்களுக்கு அறுவை சிகிச்சை உட்பட அனைத்து சிகிச்சைகளுக்கும் காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும். தொகுப்பூதியம் பெறும் அனைத்து பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம், 7,850 ரூபாய் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மேலும் கால நீட்டிப்பு செய்யாமல் வழங்க வலியுறுத்தினர். மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் சங்கரன், அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலர் விஜயமனோகரன், ரமேஷ், ராஜ்குமார் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி