மேலும் செய்திகள்
பள்ளி நுாற்றாண்டு விழா
08-Feb-2025
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதி, காசிபாளையம் அரசு துவக்கப்பள்ளி, 1924 மார்ச், 27ல் துவங்கப்பட்டு செயல்படுகிறது. கடந்த, 1983ல் நடுநிலை பள்ளியாக, 2010ல் உயர்நிலை பள்ளியாக, 2012ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் துவக்கப்-பள்ளி தனியாக செயல்படுகிறது. மாநகராட்சி துவக்கப்பள்ளியில் தற்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 87 மாணவர், 70 மாணவியர் என, 157 பேர் படிக்கின்றனர். பள்ளி துவங்கி நுாற்-றாண்டு நிறைவடைவதால், நுாற்றாண்டு விழா மற்றும் புதிதாக கட்டிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. நுாற்றாண்டு நினைவு வளைவு, கூடுதல் வகுப்பறை கட்டடத்தை, அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து, நுாற்றாண்டு மலரை வெளியிட்டார். தலைமை ஆசிரியை ஜோதிமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
08-Feb-2025