உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விலை குறைப்பால் ரூ.1,400 கோடி இழப்பு ஆவினுக்கு அரசு வழங்க வலியுறுத்தல்

விலை குறைப்பால் ரூ.1,400 கோடி இழப்பு ஆவினுக்கு அரசு வழங்க வலியுறுத்தல்

ஈரோடு: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்க, மாநில நிர்வாகி-களின் கொங்கு மண்டல கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்து, கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் நிலையை உயர்த்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பால் உற்பத்தி-யாளர்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு பாலை வழங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் தினமும், 3 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது. ஆனால் ஆவின் நிர்வாகம் 30 லட்சம் லிட்டரை மட்டுமே கொள்-முதல் செய்கிறது. இதை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்-கப்படவில்லை.ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு, 3 ரூபாயை முதல்வர் குறைந்து அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி ஆவின் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ள, 1,400 கோடி ரூபாய் வருவாய் இழப்பை, அரசு நிதியில் இருந்து ஆவின் நிர்வாகத்துக்கு வழங்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறினார். கூட்டத்தில் பொருளாளர் ராமசாமி, துணை தலைவர் பத்மநாபன், பழனியப்பன், ராஜ் உட்பட பலர் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ