உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பச்சை மிளகாய் கிலோ ரூ.120

பச்சை மிளகாய் கிலோ ரூ.120

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட்-டுக்கு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாட-காவில் இருந்து காய்கறி வரத்தாகிறது. நேற்று பச்சை மிளகாய் கிலோ, ரூ.120க்கு விற்கப்பட்டது. கடந்த வாரம், 80 ரூபாய்க்கு விற்ற நிலையில், 40 ரூபாய் இந்த வாரம் அதிகரித்துள்ளது. வரத்து குறைவே இதற்கு காரணம். மார்க்கெட்டில் பிற காய்கறிகள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கொத்தவரை-50, தக்காளி-70, கத்திரிக்காய்-60, தேங்காய்-50, கருணை கிழங்கு-80, இஞ்சி-120, ஊட்டி உருளை கிழங்கு-70, குடைமிளகாய்-80, பச்சை பட்டாணி-60, பாகற்காய்-100, சின்ன வெங்காயம்-80, பெரிய வெங்காயம்-60, காலி பிளவர்-70, அவரை-60, பூசணிக்காய்-50.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ