மேலும் செய்திகள்
ஆதனஞ்சேரி மளிகை கடையில் 13 கிலோ குட்கா பறிமுதல்
13-Jun-2025
கோபி, கோபி அருகே புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த மளிகை கடைக்காரரை, கடத்துார் போலீசார் கைது செய்தனர்.கோபி அருகே அரசூர் சாலையில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சத்தியமங்கலம் அருகே அரசூர்புதுாரை சேர்ந்த பழனிச்சாமி, 66, மளிகை கடையில் சோதனை செய்தனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 200 பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தார். அவற்றை பறிமுதல் செய்து, பழனிச்சாமியை கைது செய்தனர்.
13-Jun-2025