உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மளிகை கடைக்காரர் கடனால் விபரீத முடிவு

மளிகை கடைக்காரர் கடனால் விபரீத முடிவு

கோபி, கோபி அருகே பொலவக்காளிபாளையத்தை சேர்ந்தவர் பொன்ராஜ், 48, மளிகை கடை உரிமையாளர்; இவரின் மனைவி ஸ்டெல்லா, 41; இரு மகள்களும் உள்ளனர். பொன்ராஜ் நேற்று காலை மளிகை கடைக்குள் துாக்கிட்டு கொண்டார். சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பல்வேறு இடங்களில் வாங்கிய கடனை முழுமையாக திருப்ப செலுத்த முடியாத வேதனையில் இருந்தார். இதனால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, மனைவி ஸ்டெல்லா அளித்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !