உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபர் மீது குண்டாஸ்

வாலிபர் மீது குண்டாஸ்

ஈரோடு, கோபி ஓடை பகுதி சீதாலட்சுமி புரத்தை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் மகன் அஜய் (எ) அஜித், 23; இவரிடம் இருந்து மூன்றரை கிலோ கஞ்சாவை, கோபி மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க எஸ்.பி., மூலம் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்றதால், அஜய் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ