தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கோபியில் குருபூஜை விழா
கோபி: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்-தியை முன்னிட்டு, 117 வது குருபூஜை விழா, கோபி அருகே மொடச்சூரில் நேற்று நடந்தது.தேவர் சிலைக்கு, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்-டையன் மலர் துாவி மரியாதை செலுத்தினார். கோபி யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ், முன்னாள் எம்.பி., சத்தியபாமா உட்பட பலர் பங்கேற்றனர்.