மேலும் செய்திகள்
குடிநீர் கேட்டு பஞ்., அலுவலகம் முற்றுகை
26-Aug-2025
பவானிசாகர், :வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி விற்பதாக கிடைத்த தகவலின்படி, பவானிசாகர் போலீசார் வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை சோதனைக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் வீட்டில் இருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ், 55, என்பது தெரிந்தது. வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தார். பால்ராஜை கைது செய்த போலீசார், 102 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
26-Aug-2025