மேலும் செய்திகள்
மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு கூட்டம்
30-Sep-2024
ஈரோடு: தமிழ்நாடு மாற்று திறனாளிகளின் வாழ்வுரிமை நல சங்கங்களின் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு, ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டமைப்பை சேர்ந்த ராஜரத்தினம் தலைமை வகித்தார். மாநில மகளிர் செயலாளர் இளையரசி வரவேற்றார். அரசு துறை காலி பணியிடங்களில் மாற்று திறனாளிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை சிறப்பு தேர்வு மூலம் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.உயர்கல்வி, வேலை வாய்ப்பு, இதர அரசு நல திட்டங்கள் பெறு-வதற்கான இட ஒதுக்கீட்டை, ௧௦ சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
30-Sep-2024