கைத்தறி நெசவு தொழிலாளர்கள் 18ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
கைத்தறி நெசவு தொழிலாளர்கள்18ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுஈரோடு, அக். 15-ஈரோட்டில், மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி.,) நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் சித்தையன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் சின்னசாமி, பொதுச் செயலாளர் வரதராஜன், பொருளாளர் பொன்னுசாமி பேசினர்.கைத்தறி ஜவுளிகளுக்கு அரசால் வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தை நிபந்தனையின்றி உடன் வழங்க வேண்டும். நெசவு கூலியை ரொக்கமாக வழங்க கோரி வரும், 18ல் ஈரோடு கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்வது. மாவட்டத்தில், 190 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கு பல ஆண்டாக அரசின் தள்ளுபடி மானியம் வழங்கப்படவில்லை. இதை தீபாவளிக்கு முன் வழங்க வேண்டும். அப்போதுதான் நெசவாளர்களுக்கு போனஸ் வழங்க இயலும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 18ல் ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவு செய்தனர்.கூட்டத்தில் நிர்வாகிகள் கந்தசாமி, ராசம்மாள், கோவிந்தன், ரணதிவேல், மணிவண்ணன், சரஸ்வதி, ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.