மேலும் செய்திகள்
பலத்த மழையால் நள்ளிரவில் மின்தடை
20-Oct-2024
கோபி, பெருந்துறையில் கனமழைகோபி, அக். 22-கோபி டவுன் பகுதியில், நேற்று அதிகாலை, 2:45 மணி முதல், 3:30 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்நிலையில் கோபி பஸ் ஸ்டாண்ட், ஈரோடு சாலை, புதுப்பாளையம், கரட்டூர், பாரியூர் சாலை உள்ளிட்ட பகுதியில் நேற்று காலை, 10:00 மணி வரை, லேசான சாரல் மழை பெய்தது. பலத்த மழையால் பா.வெள்ளாளபாளையம் பிரிவை கடந்து, பிரதான பாரியூர் சாலையில், ஒரு பனைமரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. வருவாய் மற்றும் பொது பணித்துறையினர் பனைமரத்தை அகற்றினர்.* பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் நீடித்து, நேற்று காலை, 10:00 மணி வரை பெய்தது. மழை நின்றவுடன் வழக்கம்போல் வெயில் வாட்டியது. பலத்த மழையால், பெருந்துறையில் தாழ்வான பகுதிகளில், மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
20-Oct-2024