உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கள்ளிப்பட்டியில் கடும் பனிப்பொழிவு

கள்ளிப்பட்டியில் கடும் பனிப்பொழிவு

டி.என்.பாளையம், டிச. 15-டி.என்.பாளையம் அருகே கள்ளிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், எரங்காட்டூர், வளையபாளையம், அடசப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடியவிடிய துாறல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை கடும் பனிப்பொழிவு நிலவியது. காலை, 8:30 மணி வரை நீடித்ததால், வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்ல நேரிட்டன. அதிகாலையில் வேலைக்கு செல்வோர், கடுமையாக பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி