கனரக வாகனங்களுக்கு பவானியில் தடை
பவானி, கேரளா, கோவை பகுதிகளில் இருந்து தினமும் சேலம் பைபாஸ் வழியாக, பவானி வந்து மேட்டூர், தொப்பூர், கிருஷ்ணகிரி பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. தற்போது பவானி பகுதியில் குடிநீர் மற்றும் சாக்கடைகளுக்கு, பல்வேறு இடங்களில், ராட்சத குழாய் பொருத்தும் பணி நடந்து வருகிறது. கனரக வாகனங்கள் வந்தால் பணி பாதிக்கப்படும். இதனால் கோவை-சேலம் பைபாஸ் வழியாக வரும் கனரக வாகனங்கள், பவானி நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் லட்சுமி நகரில் இருந்து, அவுட்டர் பைபாஸ் வழியாக குருப்பநாயக்கன்பாளையம், மேட்டூர் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.