நம்பியூர் அருகே சாலையைநெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு
நம்பியூர், டிச. 18--நம்பியூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு, 2024--25 திட்டத்தின் கீழ், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் கொளப்பலூர் அருகே, அக்கரைப்பாளையம்-குதிரைக்கல்பாளையம் சாலையில், 3.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடைந்தது.அதை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கங்காதரன், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, உதவி கோட்டப்பொறியாளர் மலைச்சாமி, நெடுஞ்சாலைத்துறை, நம்பியூர், தரக்கட்டுப்பாடு உதவிக்கோட்டப்பொறியாளர் சுரேஷ் கோபி மற்றும் உதவிப்பொறியாளர் லோகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.