விவசாயிகளுக்கு கவுரவ நிதி விடுவிப்பு நிகழ்ச்சி
ஈரோடு: பிரதமரின் விவசாய கவுரவ நிதியில், 20வது தவணை விடுப்பு நிகழ்ச்சி, ஈரோடு மாவட்டம் வடுகப்பட்டி பேரூராட்சியில் நடந்தது. வேளாண் அறிவியல் நிலைய உழவியல் விஞ்ஞானி சரவணகுமார், திட்டத்தின் சிறப்பு குறித்து விளக்கினார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, மத்திய அரசின் திட்டங்கள், பயன்கள் குறித்து விளக்கமளித்தார். நிகழ்வில் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், அதிகாரிகள் மற்றும் விவசாயிகள், மக்கள் கலந்து கொண்டனர்.