உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மழையால் இடிந்த வீடு

மழையால் இடிந்த வீடு

பவானி, பவானி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் பவானி அருகே தொட்டிபாளையம் பழைய காலனியை சேர்ந்த பழனி, 63, என்பவரின் பழமையான தொகுப்பு வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அதேசமயம் பீரோ, டி.வி., உள்ளிட்டவை சேதமடைந்தது. பவானி தாசில்தார் சரவணன் இடிந்த வீட்டை ஆய்வு செய்தார். பழனி வீட்டுக்கு, 1.20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை