உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யானை தாக்கியதில் தரைமட்டமான வீடு

யானை தாக்கியதில் தரைமட்டமான வீடு

தாளவாடி: தாளவாடி மலையில் உள்ள கேர்மாளம், பூதாளபுரத்தை சேர்ந்-தவர் ஜடே மாதப்பா. நேற்று முன்தினம் இரவு குடும்பத்தின-ருடன் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை வனப்பகுதியிலிருந்து வந்த ஒற்றை யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்த ஜடே மாதப்பா குடும்-பத்தினருடன் பதுங்கி கொண்டார். அதேசமயம் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு, பட்டாசு வெடித்து யானையை விரட்-டினர். யானை தாக்கியதில் வீடு தரைமட்டமானது. இந்த யானை அடிக்கடி ஊருக்குள் வந்து தொந்தரவு செய்கிறது. அடர்ந்த வனப்-பகுதிக்குள் விரட்ட வேண்டுமென்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி