வீட்டில் திருடியவர் கைது
பவானி:சித்தோடு நால்ரோட்டில் திருமண மண்டபத்தில் வாட்ச்மேனாக வேலை செய்பவர் கணேஷ், 54; இவரது வீட்டில் இரு தினங்களுக்கு முன் புகுந்த ஆசாமி, 10 ஆயிரம் ரூபாய், இரண்டு செல்போன்களை திருடி சென்றார். புகாரின்படி சித்தோடு போலீசார் களவாணியை தேடி வந்தனர். கைவரிசை காட்டிய சித்தோடு சாணார்பாளையம் பிரபு, 19, என்பவரை கைது செய்தனர்.