உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., 200 தொகுதிகளை பிடித்தால் அ.தி.மு.க., என்ற கட்சியே இருக்காது

தி.மு.க., 200 தொகுதிகளை பிடித்தால் அ.தி.மு.க., என்ற கட்சியே இருக்காது

'தி.மு.க., 200 தொகுதிகளை பிடித்தால்அ.தி.மு.க., என்ற கட்சியே இருக்காது' ஈரோடு, நவ. 19-ஈரோடு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நலக்குழு மேற்கு மண்டல ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., அந்தியூர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் கடந்த காலங்களில் தி.மு.க., பின்னடைவாக இருந்தது. அதை முன்னேற்ற முதல்வர் ஸ்டாலின் பல திட்டங்களை செயல்படுத்தினார். மக்கள் பயன் பெற்றதால், மேற்கு மண்டல உள்ளாட்சி அமைப்புகள், லோக்சபா தேர்தலில் தி.மு.க., பெரும் வெற்றி பெற்றது. முன்பு பெண்கள், ஆதிதிராவிடர் மக்களின் ஓட்டு இல்லாததால்தான் சரிவு ஏற்பட்டது. 3 ஆண்டு திட்டங்களில், 90 சதவீத பெண்கள் பயன் பெற்று, தி.மு.க.,வுக்கு வாக்காக வந்து சேர்ந்துள்ளது. இட ஒதுக்கீட்டால் ஆதிதிராவிடர்களின் வாக்கும் சேர்ந்துள்ளது. தமிழகத்தில் வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., 200 தொகுதிகளை பிடித்தால், அ.தி.மு.க., என்ற கட்சியே இருக்காது. அந்த நிலைக்காக ஆதிதிராவிடர் நலப்பிரிவு, மகளிர் அணி உட்பட அனைத்து அமைப்பு நிர்வாகிகளும் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஆதிதிராவிடர் நலத்துறை சார்பிலான திட்டங்கள், அம்மக்களுக்கு சென்றடைய ஆதிதிராவிடர் நலக்குழு முயல வேண்டும். நான் அத்துறை அமைச்சராக இருந்தாலும், மக்களிடம் திட்டங்கள் சென்றடைய, நலக்குழு பொறுப்பாளராக உள்ள நானும் ஒவ்வொரு முயற்சியும் செய்து வருகிறேன்.ஆதிதிராவிட நலத்துறை திட்டங்கள், தாட்கோ வாங்கி, பழங்குடியினர் நலத்துறை சார்பிலான திட்டங்களை ஒவ்வொருவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். மக்களுடன் முதல்வர் திட்டம் போல, ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில், கோரிக்கை மனு பெறப்பட்டு, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ