உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கலெக்டர் ஆபீஸ் எதிரில் கம்பீர கம்பியால் கலக்கம்

கலெக்டர் ஆபீஸ் எதிரில் கம்பீர கம்பியால் கலக்கம்

ஈரோடு, ஜன. 1-ஈரோடு கலெக்டர் அலுவலக முன்புறம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மக்கள் நடந்து செல்வதற்காக, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.நடைபாதை அமைப்பதற்கு முன் கம்பங்களை இழுத்து கட்டும் கம்பி இருந்தது. அதை அகற்றாமலே நடைபாதை அமைத்து விட்டனர். தற்போது நடைபாதை நடுவில் கம்பி கம்பீரமாக காணப்படுகிறது.போதிய வெளிச்சம் இல்லாத அந்தப்பகுதியில் இரவில் நடந்து செல்வோர் கம்பியில் கால் இடறி விழும் அபாயம் உள்ளது. எத்தனை பேர் விழுந்து எழுந்தார்களோ தெரியாது. இந்த செய்திக்குப் பிறகாவது, கம்பீர கம்பி அகற்றப்படுமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை