உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வருமான வரித்துறை 2ம் நாளாக சோதனை

வருமான வரித்துறை 2ம் நாளாக சோதனை

ஈரோடு, மும்பையை தலைமையிடமாக கொண்டு, மொடக்குறிச்சியில் மேரிகோ லிமிடெட் நிறுவனம் செயல்படுகிறது. இதன் சார்பில் 'பாராசூட்' தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் கிளை உள்ளது. மொடக்குறிச்சியில் முத்துார் சாலையில் கொப்பரை கொள்முதல் நிலையம் உள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகள், 10 பேர் இங்கு நேற்று முன்தினம் காலை சோதனையை தொடங்கினர். கொப்பரை கொள்முதல், லாரிகளில் அனுப்புவது உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். இரவு வரை நீடித்த நிலையில், இரண்டாம் நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. மேற்கொண்டு எந்த விபரமும் தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !