வருமான வரியில் விலக்கு; ஓய்வூதியர் தீர்மானம்
ஈரோடு :தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு மற்றும் கண் பரிசோதனை முகாம் ஈரோட்டில் நடந்தது. மத்திய அரசு வெளியிட்ட ஓய்வூதிய திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். ஓய்வூதியர் குடும்ப நல நிதியை, 50,000 ரூபாயில் இருந்து, 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வரிமான வரி விலக்கு அளிக்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீத ஊதிய உயர்வை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் மாவட்ட தலைவராக பன்னீர்செல்வம், மாவட்ட செயலராக மணிபாரதி, பொருளாளராக பாலசுப்பிரமணியன், துணை தலைவர்களாக சங்கரன், சீனிவாசன், பிரசன்னா உட்பட பல நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.