பயிர் கடன் வட்டியை திரும்ப பெறுவதில் நிலவும் குளறுபடி; தீர்வு காண வலியுறுத்தல்
ஈரோடு: 'பயிர் கடனை திரும்ப செலுத்திய விவசாயிகளுக்கு, அக்கடனுக்-கான வட்டியில், 3 சதவீதத்தை திரும்ப தருவதில் வங்கிகள் குள-றுபடி செய்வதை தடுக்க வேண்டும்' என, ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபிதளபதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம-னுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கான சொத்து அட-மானமில்லாத வருடாந்திர பயிர் கடன் உச்ச வரம்பு, தேசிய வங்-கிகளில் தற்போது, 1.60 லட்சம் ரூபாயாக உள்ளது. விவசாய சங்-கங்கள் கேட்டு கொண்டதன்படி, வருமாண்டில் கடன் தொகையை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியதற்கு, மத்திய நிதிய-மைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதேநேரம் 'ஓராண்டு காலத்தில் திரும்ப செலுத்தும்' முறையில் வாங்கப்படும் பயிர் கடனை, முறையாக விவசாயிகள் திரும்ப செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும்போது, 7 சதவீத வட்டியில், 3 சதவீதத்தை மத்திய அரசு ஏற்கும். விவசாயிகளுக்கு, 4 சதவீத வட்டியை மட்டும் விதிக்கும்.இந்நடைமுறையை மாற்றி, விவசாயிகளுக்கு, 4 சதவீத வட்டியை மட்டும் வங்கிகள் விதிக்க வேண்டும். 'ரீ-இம்பெர்ஸ்மென்ட்' திட்டத்தில் (திரும்ப பெறும்) வங்கியாளர்கள் குளறுபடி செய்கின்-றனர். மத்திய அரசு வட்டியில் தரும் தள்ளுபடி, விவசாயிகளுக்கு முறையாக சேர்வதில்லை. எனவே வட்டியை முழுமையாக செலுத்தி, திரும்ப பெறும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.