உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விதியை மீறி தலைவிதியை சந்திக்கும் துணிச்சல் அதிகரிப்பு:12,108 வழக்குகள் 8 மாதத்தில் பதிவு

விதியை மீறி தலைவிதியை சந்திக்கும் துணிச்சல் அதிகரிப்பு:12,108 வழக்குகள் 8 மாதத்தில் பதிவு

ஈரோடு:மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, தெற்கு போக்குவரத்து போலீசில் மட்டும், ௧௨,108 வழக்குகள் பதிவாகி உள்ளன.ஈரோடு மாநகரில் போக்குவரத்தை சீரமைக்க தெற்கு, வடக்கு போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் தெற்கு போக்குவரத்து போலீசில் நடப்பாண்டு ஜன., முதல் ஆக., வரையிலான எட்டு மாதத்தில், 12,108 போக்குவரத்து விதிமீறல் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுபற்றி போலீசார் கூறியதாவது: கடந்த எட்டு மாதத்தில் குடிபோதையில் வாகனம் இயக்கியதாக, 897 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு சக்கர வாகனத்தில் போதையில் வந்த, 124 பேர் அடக்கம். இதில், 336 பேரின் ஓட்டுனர் உரிமத்தை லைசன்ஸ் ரத்து செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியதாக, 6,003 பேர்; டூவீலரில் பின்னால் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 175 பேர்; டிரைவிங் லைசன்ஸ் இன்றி வாகனம் இயக்கியதாக, 65 பேர்; சீட் பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனத்தில் சென்ற, 278 பேர்; மொபைல்போனில் பேசியபடி வாகனம் இயக்கியதாக, 357 பேர்; விபத்து ஏற்படும் வகையில் சென்றதாக, 150 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அபராத தொகையாக, 57 லட்சத்து, 25 ஆயிரத்து, 700 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இன்னும் அதிகரிக்கும்பிற ஊர்களில் பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, ஈரோடு போக்குவரத்து போலீசார் அழைக்கப்படுகின்றனர். இதனால் விதிமீறல் வழக்கு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. முழு வீச்சில் போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிந்தால் எண்ணிக்கை பிரமிக்க வைக்கும். ஈரோடு மாநகரில் வாகனங்களை ஓட்டுவோர் கவனக்குறைவாக, அலட்சியமாக, அபராதம் குறித்து கவலையின்றி வாகனத்தை இயக்குகின்றனர் என்பதும், போலீசாரின் வருத்தமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி