மேலும் செய்திகள்
குடியரசு தினவிழா கோலாகலம்
27-Jan-2025
ஈரோடு: நாடு முழுவதும், ௭௬வது குடியரசு தினவிழா நேற்று கோலாகல-மாக கொண்டாடப்பட்டது.இதன்படி ஈரோடு மாவட்டத்திலும் உற்சாகமாக நடந்தது. ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் குடியரசு தினவிழா நிகழ்வு, ஆணைக்கல்-பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தேசிய கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சுதந்திர போராட்ட தியா-கிகள், அவர்களது வாரிசுகளை கவுரவித்தார். 50 போலீசாருக்கு, முதல்வர் காவலர் பதக்கம், வனத்துறை, தீயணைப்பு துறையினர் என பல்வேறு துறையை சேர்ந்த, 100 பேருக்கு பாராட்டு சான்-றிதழ் வழங்கப்பட்டது.அரசு இசைப்பள்ளி, ஈரோடு சி.எஸ்.ஐ., பள்ளி, பி.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.வி.என்., மெட்ரிக் மேல்நி-லைப்பள்ளி, பெருந்துறை அரசு மாதிரி பள்ளி என, ஐந்து பள்ளி-களை சேர்ந்த, 300 மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்-தது.மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்று, கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பொது பார்-வையாளர் அஜய்குமார் குப்தா, செலவின பார்வையாளர் தினேஷ்-குமார் ஜாங்கிட், எஸ்.பி., ஜவகர், மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் உட்பட பலர் பங்கேற்றனர். டி.ஆர்.ஓ., சாந்தகுமார் நன்றி கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், நலத்திட்ட உதவி வழங்கப்ப-டவில்லை.அமைப்புகள் சார்பில்...ஈரோடு பகுதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில், குடியரசு தின-விழா நடந்தது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலுவலகத்தில் பொதுச் செயலாளர் கனகராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். மாநகர பொதுச் செயலாளர் அம்மன் மாதேஸ் இனிப்பு வழங்-கினார். ஈரோடு மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ-தியர் சங்கம் சார்பில் நடந்த விழாவில், ஓய்வு பேராசிரியர் பெரு-மாள்சாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.கோபியில்...கோபி ஆர்.டி.ஓ., ஆபீசில், சப்-கலெக்டர் சிவானந்தம், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தாலுகா ஆபீசில் தாசில்தார் சரவணன், நகராட்சி அலுவலகத்தில் சேர்மன் நாகராஜ் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.* நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதை தொடர்ந்து ஆண்டு விழா நடந்தது. இதை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் பரிசு வழங்கினார்.புளியம்பட்டியில்...புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் ஜனார்த்தனன், தேசிய கொடியேற்றி, கவுன்சிலர்கள், நக-ராட்சி அலுவலர்கள், பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். புன்செய்புளியம்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.புன்செய் புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு காங்., கட்சி சார்பில் மரியாதை செலுத்-தப்பட்டது. பவானிசாகர் யூனியன் அலுவலகம், பவானிசாகர் வட்டார தொடக்க கல்வி அலுவலகத்திலும் குடியரசு தினவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
27-Jan-2025