மா.திறனாளிகள் பள்ளியில் ஆய்வு
ஈரோடு, ஈரோடு, செங்கோடம்பாளையத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில், கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், 30 மாணவ, மாணவியரிடம் பேசினார். வகுப்பறை, படுக்கை வசதி, கழிப்பறை மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். சமைத்து வைக்கப்பட்டிருந்த பொங்கல், இட்லி, தக்காளி சாதத்தை சாப்பிட்டு ருசி பார்த்தார்.குழந்தைகளுக்கு உணவுகளை தரமாக வழங்க வேண்டும். பள்ளி வளாகம், துாங்கும் அறை, கழிப்பறைகளை துாய்மையாக பராமரிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தேவைப்படாத பழைய ஆடை, பொருட்களை அகற்றிவிட்டு, பாதுகாப்பாக பராமரிக்க யோசனை தெரிவித்தார்.