உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை

ஈரோடு, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய, தமிழகத்தில் அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும், பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பயணிகளின் உடமைகளை தீவிரமாக சோதனை செய்யவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே போலீசார் பயணிகளின் உடமைகளை, நேற்று மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதித்தனர். வரும் நாட்களிலும் சோதனை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ