உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல்

அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல்

ஈரோடு: ஈரோடு, சென்னிமலை ஆகிய யூனியன் அலுவலகங்களில், அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு, தகுதியான-வர்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஈரோடு யூனியன் அலுவலகத்தில், 4 பணியிடங்கள், சென்னிமலை யூனியன் அலுவலகத்தில், 3 பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டன. மொத்தம், 302 பேர் விண்ணப்பித்திருந்தனர். தகு-தியற்ற விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, 89 பேருக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட்டது. ஈரோடு யூனியன் அலுவலகத்தில் நேற்று நேர்காணல் நடந்தது. சிறப்பு அதிகாரி சுதாகரன் தலை-மையில் வட்டார வளர்ச்சி ஆணையர் லதா, அம்புரோஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை