மேலும் செய்திகள்
ஆதிதிராவிட இளைஞர்களுக்கு இலவச அழகு கலை பயிற்சி
04-Jun-2026
ஈரோடு:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் பிளஸ் 2 முடித்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினம் சார்ந்தவர்களுக்கு தாட்கோ, தனியார் நிறுவனங்கள் இணைந்து அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சி வழங்கப்பட உள்ளது.பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டவர்கள், 45 நாட்கள் திருச்சி மாவட்டத்தில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்கலாம்.பயிற்சியின்போது தங்கி படிக்கவும், செலவின தொகையும் தாட்கோவால் ஏற்கப்படும். www.tahdco.comஎன்ற முகவரியில் பதிவு செய்யலாம். கூடுதல் விபரத்துக்கு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை அணுகலாம்.
04-Jun-2026