உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிராணி துயர் தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர அழைப்பு

பிராணி துயர் தடுப்பு சங்கத்தில் உறுப்பினராக சேர அழைப்பு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் அனைத்து விலங்குகள் நல அன்பர்கள், சமூக பணியாளர்கள், பொதுமக்கள் 'எஸ்.பி.சி.ஏ.,' உறுப்பினர்களாக இணைந்து, விலங்குகளுக்கு கொடுமையற்ற, நல்லிணக்கமான சமூகத்தை உருவாக்க, பிராணிகள் துயர் தடுப்பு சங்கத்துக்கு (எஸ்.பி.சி.ஏ.,) உறுப்பினர் சேர்க்கவுள்ளனர்.ஈரோடு கால்நடை பன்முக மருத்துவமனை அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து, ஆவணங்கள் இணைத்து அனுப்ப வேண்டும். மாவட்டத்தை சேர்ந்த, 18 வயதுக்கு மேற்பட்டோர், விலங்குகள் நலனில் அக்கறை, அன்பு செலுத்துபவர், குற்றவியல் சட்டத்தில் தண்டனை பெறாதவர்கள், அரசியல் கட்சி சாராதவர்கள் உறுப்பினராகலாம். பதிவு கட்டணம், 100 ரூபாய். ஆண்டு உறுப்பினர் கட்டணம், 200 ரூபாய். வாழ்நாள் உறுப்பினர் கட்டணம், 2,000 ரூபாய். விண்ணப்பங்களை, 'பிரதம மருத்துவர் அலுவலகம், கால்நடை பன்முக மருத்துவமனை, ஈரோடு - 638001, போன்: 94426 27405,' என்ற முகவரிக்கு டிச.,8க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !