உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கைம்பெண்கள் நலத்திட்ட உதவி பெற அழைப்பு

கைம்பெண்கள் நலத்திட்ட உதவி பெற அழைப்பு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் கைம்பெண், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் வாழ்வாதாரத்துக்கான வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மகளிர் குழு அமைப்பு, தொழிற்பயிற்சி வழங்குதல், பாதுகாப்பான வாழ்க்கைக்கு, கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம் செயல்படுகிறது.இதற்காக தனித்தனியாக இணைய தளம் https://tnsocialwelfare.tn.gov.inமற்றும் www.tnwidowwelfareboard.tn.gov.inஉருவாக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான பெண்கள் பதிவு செய்து உறுப்பினராகி, உரிய பலன் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ