மூத்த தம்பதிக்கு சிறப்பு பதிவு செய்ய அழைப்பு
சென்னிமலை: இந்து சமய அறநிலையத்துறை புதிய அறிவிப்பின்படி, மணி விழா கண்ட, 70 வயது பூர்த்தியடைந்து, ஆன்மிக ஈடுபாடு உள்ள தம்பதியினருக்கு கோவில் சார்பில் சிறப்பு செய்யப்பட உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள தம்பதியர், சென்னிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்து சிறப்பு பெறலாம்.