உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகை கடையில் திருடிய ஈரானிய கொள்ளையர் கைது

நகை கடையில் திருடிய ஈரானிய கொள்ளையர் கைது

பவானி: அம்மாபேட்டையை அடுத்த ஜர்த்தலை சேர்ந்தவர் முருகன், 48; குருவரெட்டியூரில் நகை கடை நடத்தி வருகிறார். கடையில் கடந்த மாதம், 1௬ல் மைத்துனர் தேவராஜ், அவரது அம்மா மட்டும் இருந்தனர். அப்போது வந்த இருவர் நகை வாங்குவது போல் நடித்து, 16 கிராம் எடையுள்ள, 80 ஆயிரம் மதிப்புள்ள தங்-கத்தை திருடி சென்றனர். இரவில் நகையை சரிபார்த்தபோதுதான், இருவரும் நகையை திருடி சென்றது, சிசிடிவி கேமரா காட்சி மூலம் கண்டறிந்தனர். புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் இருவரையும் நேற்று பிடித்தனர்.விசாரணையில் ஈரானிய குழுவை சேர்ந்த, கர்நாடக மாநிலம் சிக்மல்லாபூர் மாவட்டம் அலிபுரா அப்சர் ஹுசைன், 34; கிருஷ்-ணகிரி மாவட்டம் வெங்கடாபுரம் கிராமம் கே.ஏ.நகர் ஹரிப் ஹுசைன், 27, என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை