உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அணி மாறுகிறாரா கொ.ம.தே.க., ஈஸ்வரன் இ.பி.எஸ்.,ஐ புகழ்ந்ததால் கட்சியினர் சந்தேகம்

அணி மாறுகிறாரா கொ.ம.தே.க., ஈஸ்வரன் இ.பி.எஸ்.,ஐ புகழ்ந்ததால் கட்சியினர் சந்தேகம்

ஈரோடு: இ.பி.எஸ்.,ஐ புகழ்ந்ததன் மூலம் அ.தி.மு.க., அணிக்கு கொ.ம.தே.க., ஈஸ்வரன் அணி மாறுகி-றாரா என்ற சந்தேகம், கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., - வி.சி., கட்சி-யினர் ஆட்சியில் பங்கு, கூடுதல் சீட் கேட்ப-துடன், ஆட்சி, முக்கிய நபர்களை விமர்சித்து வருகின்றனர். அதேநேரம் அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும், சில நேரம் எதிர்ப்பா-கவும் பேசி, கூட்டணியை அவ்வப்போது ஆட்டி பார்க்கின்றனர். இந்த வரிசையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்-பாளையம் வந்த கொ.ம.தே.க., பொது செய-லாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டியில், ''தற்போ-தைய சூழலில் அ.தி.மு.க.,வை வழி நடத்த இ.பி.எஸ்.,ஐ தவிர வேறு யாராலும் முடியாது'' என புகழ்ந்து தள்ளினார். இந்த பேச்சு குறித்த செய்தியும், வீடியோவும் வைரலாகி, விமர்ச-னத்தை முன்வைக்கிறது.பகிரங்க விமர்சனம்தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்தில் திருச்-செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈஸ்வரன், இ.பி.எஸ்.,ஐ புகழ்வது, அணி-மாறும் அச்சாரமாக இருக்குமோ, என பகிரங்க-மாகவே விமர்சனம் எழுந்துள்ளது.இதுபற்றி கொ.ம.தே.க.,வினர் கூறியதாவது: நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், திருச்செங்-கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள். நாங்கள் அணி மாறும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை. கூட்டணியில் குழப்பம்அதேநேரம், சமீபமாக தமிழகத்தில் நடக்கும் கொலை, போக்சோ வழக்கு, போலீஸ் நடவ-டிக்கை, சீமான் வழக்கில் மெத்தனம், கூட்டணி கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் வழங்காத நிலைப்பாடுகளை காண முடிகிறது. கொ.ம.தே.க.,வுக்கு நேரடியாக இதுபோன்ற பிரச்னை எழவில்லை என்றாலும், கூட்டணியில் பல குழப்பம் நிலவுகிறது.தவிர அ.தி.மு.க., - பா.ஜ., என இரு கட்சிகளும், தி.மு.க., கூட்டணியை உடைக்கவும், அங்குள்ள-வர்களை தங்கள் அணிக்குள் இழுக்கும் முயற்-சியும் நடக்கிறது. 2026 தேர்தல் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு மட்டுமின்றி அனைவ-ருக்கும் வாழ்வா சாவா பிரச்னை. அதற்கேற்ப ஈஸ்வரனின் அசைவுகள் அமையலாம். அதற்-காக அ.தி.மு.க., கூட்டணி மாறுகிறார் என கூற இயலாது. ஆனால் அ.தி.மு.க., பக்கம் சாய்வதாக வைரலாகும் கருத்துக்களையும் பார்த்தோம். இவ்வாறு கூறினர். கொ.ம.தே.க., கட்சியினரி-டையே எழுந்துள்ள சந்தேகம் தொண்டர்கள் மத்-தியிலும் பரவி வருவதாக தெரிகிறது.அரசியல் நாகரிகம்இப்போதும் சொல்கிறேன், அ.தி.மு.க.,வை பொது செயலாளர் இ.பி.எஸ்ஸால் மட்டுமே வழி நடத்த முடியும். இதை எனது கருத்தாகவே கூறி உள்ளேன். அ.தி.மு.க.,வின் பல்வேறு கட்ட பிரச்-னைகளுக்கு பின் பொதுச் செயலாளராக இ.பி.எஸ்., தேர்வு செய்யப்பட்டார். அப்போதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். நீதிமன்ற பிரச்னைகளில் அவருக்கான முடிவுகள் வந்த-போதும் வாழ்த்து தெரிவித்தேன். அரசியல் நாக-ரீகமாகவே அதை நான் தெரிவிக்கிறேன்; பார்க்-கிறேன்.சசிகலா, ஓ.பி.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் பல்வேறு அழுத்தங்களுக்கிடையே இதுவரை கட்சியை பொது செயலாளராக இ.பி.எஸ்., திறம்பட கொண்டு சென்று வருகிறார். எனவே அவரை தவிர தற்போதைய அரசியல் சூழலில் அ.தி.மு.க.,வை யாரும் திறம்படகொண்டு போக முடியாது எனத்தான் கூறினேன். நான் எந்த பக்கமும் சாயவில்லை. ஈ.ஆர்.ஈஸ்வரன் பொது செயலாளர், கொ.ம.தே.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி