உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈஷா கிராமோத்ஸவ விளையாட்டு விழா

ஈஷா கிராமோத்ஸவ விளையாட்டு விழா

ஈஷா கிராமோத்ஸவவிளையாட்டு விழா சென்னிமலை, நவ.19-கோவை ஈஷா யோகா மையம் சார்பில், ஆண்டுதோறும் ஈஷா கிராமோத்ஸவ விளையாட்டு விழா நடந்து வருகிறது. கிராம இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், நடப்பாண்டுக்கான விழா தற்போது நடந்து வருகிறது. கிளஸ்டர், பிரிவு மற்றும் மாநில அளவில் தற்போது போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னிமலை யூனியன் வெள்ளோடு அருகே பெருமாபாளையத்தில், ஈஷா வித்யா பள்ளியில் கிளஸ்டர் போட்டி நடந்தது.த்ரோபால் போட்டியில் எட்டு மகளிர் அணிகள் பங்கேற்றன. இதில் கஸ்பாபேட்டை அணி வெற்றி பெற்று அடுத்த பிரிவுக்கு முன்னேறியது. வாலிபால் போட்டியில், 12 ஆண்கள் அணிகள் கலந்து கொண்டதில், மொடக்குறிச்சி அணி அடுத்த பிரிவுக்கு தேர்வு பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒயாசீஸ் மகேஸ்வரி மஹால் உரிமையாளர் சிவசங்கரன் பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !