உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையை வளர்த்த நகராட்சி நிர்வாகம் மக்கள் கவலையை மறந்தது அநியாயம்

சாலையை வளர்த்த நகராட்சி நிர்வாகம் மக்கள் கவலையை மறந்தது அநியாயம்

புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி நகராட்சி, 11வது வார்டு சரோஜினி வீதி, பாரதி வீதி, சென்னிமலை வீதி, ரங்கப்பா சந்து, தங்கசாலை வீதி உள்ளிட்ட பகுதிகளில் கான்கிரீட் சாலை உள்ளது. இது அனைத்தும் மெயின் ரோட்டில் இருந்து நான்கு அடிவரை தாழ்வாக அமைந்துள்ளது. பத்து ஆண்டுகளில் பழைய கான்கிரீட் தளங்களை அகற்றாமலே சாலை அமைக்கப்பட்டதால், உயரம் கூடி விட்டது. மழைக்காலங்களில் வீடுகளில் மழை நீர் புகுவது அதிகரித்துள்ளது. தற்போதும் பழைய கான்கிரீட் சாலையை அகற்றாமல் அதன் மீதே சாலை அமைக்கப்படுவதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வார்டு மக்கள் கூறியதாவது: கடந்த, 2021 உயர் நீதிமன்ற உத்தரவின் படி பழைய சாலைகளை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்காததால், மழை காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகுகிறது. இதுகுறித்து நகராட்சியிடம் கேட்டபோது, அப்படித்தான் எங்களுக்கு ஆர்டர் வந்துள்ளது என்கின்றனர். நீதிமன்ற உத்தரவையே கண்டுக்காத இவர்கள், மக்களின் கவலையை கவனத்தில் கொள்வார்களா என்ன? இவ்வாறு கூறினர்.இதுகுறித்து வார்டு கவுன்சிலர் துரைசாமி (காங்.,) கூறும்போது, 'எனது கவனத்துக்கும் புகார் வந்தது. இப்படி சாலை அமைத்தால் எடை அதிகமுள்ள வாகனங்கள் சென்றால் சாலை தாங்காது; என்ன செய்வது தமிழகம் முழுவதும் இந்த அடிப்படையில்தான் நிதி ஒதுக்கப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை