மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
04-Jul-2025
ஈரோடு, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், ஜாக்டோ - ஜியோ சார்பில் ஒருங்கிணைப்பாளர் விஜயமனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.எப்.ஆர்.டி.ஓ., எனப்படும் பென்ஷன் நிதி ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா போன்ற ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். அவர்களுக்கான பணிக்கொடையை வழங்க வேண்டும். 8வது ஊதியக்குழுவை விரைவில் அமலாக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், கான்ட்ராக்ட் பணி நியமனங்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.ஒவ்வொரு, 5 ஆண்டுக்கு ஒரு முறை விலை குறியீட்டுடன் வழக்கமான திருத்தத்துடன் குறைந்த பட்ச ஊதியம், 26,000 ரூபாயை உறுதிப்படுத்தி வழங்க வேண்டும். மத்திய அரசின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 8 மணி நேரம் உட்பட போராடி பெற்ற உரிமைகளை மாற்றக்கூடாது என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட அளவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 2,150 பேர் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
04-Jul-2025