உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வெல்லம், நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ.30 உயர்வு

வெல்லம், நாட்டு சர்க்கரை மூட்டைக்கு ரூ.30 உயர்வு

ஈரோடு, வெல்லம், நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 30 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 1,500 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை நாட்டு சர்க்கரை, 1,300 முதல், 1,420 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,100 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,380 முதல், 1,520 ரூபாய்க்கு விற்பனையானது. அச்சு வெல்லம், 200 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,470 முதல், 1,520 ரூபாய்க்கு விற்பனையானது.ஆடிப்பெருக்குக்கு கிராமங்களுக்கு சென்ற வெல்லம் உற்பத்தி பணியாளர்கள், இன்னும் உற்பத்திக்கு திரும்பாததால் உற்பத்தி குறைந்தது. இதனால் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை ஆகியவை மூட்டைக்கு, 30 ரூபாய் விலை உயர்ந்து காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி