மேலும் செய்திகள்
நீதிபதியுடன் தகராறு வழக்கறிஞர்கள் மீது தடியடி
29-Oct-2024
வக்கீலை தாக்கிய 4 பேருக்கு சிறைபவானி, நவ. 15-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் பரத், 28; பவானியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனிடம் ஜூனியராக பணிபுரிகிறார். பவானி புது பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஒரு பேக்கரிக்கு பப்ஸ் வாங்க நேற்று மதியம் சென்றார். அப்போது பைக்கை பேக்கரி முன் நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஊழியர் அசோக்குமார், 34, என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் பரத்தை தாக்கியுள்ளார். அவருடன் சேர்ந்து பேக்கரி உரிமையாளர் பிரகாஷ், 34, மற்றொரு ஊழியர் ஈஸ்வரன், 35; பர்கூர், தாமரைக்கரை மணிகண்டன், 18, ஆகியோரும் பரத்தை தாக்கியுள்ளனர்.இதுகுறித்து பவானி போலீசில், பரத் புகாரளித்தார். விசாரித்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
29-Oct-2024