உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணாவிரதம்

ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணாவிரதம்

ஈரோடு: தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றக்கோரி ஜாக்டோ - ஜியோ சார்பில் உண்ணா விரத போராட்டம் தமிழக அளவில் நேற்று நடந்தது. ஈரோட்டில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன், சரவணன், வீராகார்த்திக், மதியழகன், ஆறுமுகம் தலைமை வகித்தனர்.கடந்த, 2003 ஏப்., 1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தோருக்கு பங்-களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி, 2010 ஆக., 23க்கு முன் பணியேற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்-டுள்ள அச்சுறுத்தலில் இருந்து காக்க தமிழக அரசு சீராய்வு மனு போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியம் பெறுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கி, நிரந்தரப்படுத்த வேண்டும். தேர்தல் காலத்தில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் தமிழக அரசு செயல்ப-டுத்த வலியுறுத்தினர்.இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் 19ம் தேதி வரை வட்டார அளவில் பிரசார இயக்கம், 27ல் மாவட்ட தலைநகரில் காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, ஜன.,6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ