உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பெண் ஊழியரிடம் பட்டப்பகலில் நகை பறிப்பு

அரசு பெண் ஊழியரிடம் பட்டப்பகலில் நகை பறிப்பு

அரசு பெண் ஊழியரிடம்பட்டப்பகலில் நகை பறிப்புபவானி, டிச. 11-வெள்ளித்திருப்பூர், காளிப்பட்டியை சேர்ந்தவர் பிரேமலதா, 52; குருவரெட்டியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ உதவியாளர். நேற்று முன்தினம் மதியம், வெள்ளித்திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மொபட்டில் சென்றார்.குரும்பபாளையம் அருகே மன்னாதீஸ்வரன் கோவில் வளைவில் சென்றபோது, இரு பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர், பிரேமலதா கழுத்தில் போட்டிருந்த ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அப்போது தடுமாறி விழுந்தவர் பலத்த காயமடைந்தார். அவர் புகாரின்படி வெள்ளித்திருப்பூர் போலீசார், தனிப்படை அமைத்து நகை பறித்த கொள்ளையரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை