உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 21ல் வேலை வாய்ப்பு முகாம்

21ல் வேலை வாய்ப்பு முகாம்

ஈரோடு:ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், மூன்றாவது வெள்ளிக்கிழமையான வரும், 21ம் தேதி காலை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது.எழுத படிக்க தெரிந்தவர்கள், பட்டதாரிகள், செவிலியர்கள், டெய்லர், கணினி இயக்குவோர், தட்டச்சர், ஓட்டுனர்கள் என அனைத்து பணிகளுக்குள் ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளனர். கூடுதல் விபரத்துக்கு, 8675412356, 94990 55942 என்ற எண்களில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை