ஜவுளி மொத்த விற்பனை கனி மார்க்கெட்டில் ஜோர்
ஜவுளி மொத்த விற்பனைகனி மார்க்கெட்டில் ஜோர்ஈரோடு, அக். 16-ஈரோட்டில் கனி மார்க்கெட் ஜவுளி சந்தை நேற்று நடந்தது. தீபாவளிக்கான புத்தாடைகள் மும்பை, கொல்கத்தா, சூரத், பெங்களுரு, புதியம்புத்துார் உட்பட பல இடங்களில் இருந்து வரத்தாகி உள்ளது. மூன்று நாட்களாக பகலிலும், இரவிலும் மழை பெய்வதால் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், கடைக்காரர்கள், நேரில் வந்து ஆர்டர் போட்டுள்ளனர்.இந்தாண்டு கலர் வேட்டி, ஜீன்ஸ், காட்டன் ரகங்கள், கோட் போன்ற கூடுதல் மேலாடைகள் அதிகமாக வந்துள்ளன. இனி வரும், 15 நாட்களும் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நேற்றைய நிலையில் மொத்த விற்பனை அதிகம் இருந்த போதிலும், சில்லறை விற்பனை குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, மழையால் மக்கள் நடமாட்டம் குறைந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.