உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மணிக்கூண்டு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் கூடாது தீபாவளிக்காக கனி மார்க்கெட் வியாபாரிகள் முறையீடு

மணிக்கூண்டு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் கூடாது தீபாவளிக்காக கனி மார்க்கெட் வியாபாரிகள் முறையீடு

ஈரோடு, ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், ஈரோடு கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் நுார்சேட், உப தலைவர் செல்வராஜ், செயலர் சேகர் உள்ளிட்டோர் மனு வழங்கி கூறியதாவது:ஈரோடு ஈ.கே.எம்.அப்துல் கனி மார்க்கெட், 40 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்யும் இடம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், கனி மார்க்கெட் வணிக வளாகம் கட்டி, 3 ஆண்டு தாமதமாக, வியாபாரிகள் தொடுத்த வழக்கால் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடைக்கு வைப்புத்தொகை, 2.23 லட்சம் ரூபாய். மாத வாடகை, 9,300 ரூபாய், ஜி.எஸ்.டி., - 1,674 ரூபாய் என, 10,975 ரூபாய் என, 12 மாதத்துக்கு, 1 லட்சத்து, 31,700 ரூபாய் வாடகை முன்கூட்டியே செலுத்தி உள்ளோம். 240 கடைகள் செயல்படுகிறது.அப்போது இருந்த ஆணையர், பன்னீர்செல்வம் பூங்கா முதல், மணிக்கூண்டு வரை சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தி, அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வணிக வளாகத்தின் மேல் தளத்தில், 84 கடைகளை ஒதுக்கீடு செய்தார். ஆனாலும் மீண்டும், சாலை ஓர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகமாகிவிட்டது. தீபாவளி பண்டிகைக்கு, 35 நாட்களே உள்ள நிலையில், போலீஸ், அரசியல் கட்சியினர் ஆதரவுடன் மீண்டும் கடைகள் போட்டுள்ளனர். தவிர வெளியூர் வியாபாரிகள், தீபாவளிக்கு, 2, 3 நாட்களுக்கு முன்பிருந்து கடை போடுகின்றனர்.ஆண்டு முழுவதும் மாநகராட்சிக்கு வாடகை செலுத்திவிட்டு, தீபாவளி பண்டிகை வியாபாரத்துக்கு இடையூறாக, இக்கடைகள் இருப்பதால், மக்கள் வணிக வளாகத்துக்கு வராமல் சென்று விடுகின்றனர். கடும் நஷ்டத்தை சந்திக்கிறோம். எனவே, இந்தாண்டு மணிக்கூண்டு சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை அமைக்க அனுமதிக்கக்கூடாது. அவர்களுக்கு வேறு இடம் ஒதுக்கி வழங்கலாம்.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ