உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அச்சகத்தில் விசிட்டிங் கார்டு திருடிய கர்நாடக வாலிபர்கள்

அச்சகத்தில் விசிட்டிங் கார்டு திருடிய கர்நாடக வாலிபர்கள்

அச்சகத்தில் விசிட்டிங் கார்டுதிருடிய கர்நாடக வாலிபர்கள்பு.புளியம்பட்டி, டிச. 1-ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியில், பவானிசாகர் சாலையில் ஒரு அச்சகம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் அச்சகத்துக்கு இரு வாலிபர்கள் வந்தனர். விசிட்டிங் கார்டு அச்சடிக்க வேண்டும் என உரிமையாளர் மணியிடம் கேட்டனர். இதனால் மாதிரி விசிட்டிங் கார்டுகளை எடுக்க, அச்சகத்துக்குள் அவர் சென்றார்.அப்போது முன்பக்க அறையில் டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த, 100க்கும் மேற்பட்ட விசிட்டிங் கார்டுகளை இருவரும் திருடி பாக்கெட்டுக்குள் போட்டு கொண்டனர். இதைப்பார்த்து விட்ட அச்சக உரிமையாளர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இரு வாலிபர்களையும் பிடித்து வைத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற புன்செய்புளியம்பட்டி போலீசார், வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் இருவரும் கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த மகேந்திரா, 27, வீராஸ், 30, என தெரிந்தது. மைசூருவில் தனியார் அக்ரிகல்சர் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்யும் இருவருக்கும், தமிழகத்தில் உள்ள, 100 விவசாயிகளை சந்தித்து, அவர்களது மொபைல் எண்களை சேகரித்து நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர். தமிழ் தெரியாத நிலையில், 100 பேரை சந்திக்க முடியாது எனக்கருதி, அச்சகத்தில் வைத்திருந்த விசிட்டிங் கார்டுகளை திருடியுள்ளனர். அதில் இருக்கும் எண்களை நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இருவரையும் எச்சரித்த போலீசார், சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ